விஐடி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE-2014 நுழைவுத்தேர்வின் தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியிடப்படுகின்றது.
இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர VITEEE-2014 என்ற நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டன.
மொத்தம் 4,197 சேர்க்கைக்கான இடங்கள் உள்ளது. இந்நிலையில் 1.93 லட்சம் பேர் நுழைவுத்தேர்வில் பங்கேற்றனர்.
ஏப்ரல் 28ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை மே 1ம் தேதி விஐடி பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment