Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 18 April 2014

TNPSC: குரூப் - 4 கலந்தாய்வுக்கு 6,000 பேருக்கு அழைப்பு

குரூப் - 4 கலந்தாய்வுக்கு 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்படவுள்ளன.
தமிழ்நாடு தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட பணியிடங்களில் 3,288 பேரை நியமிக்க கடந்த 1ம் தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி.யில் கலந்தாய்வு நடந்து வருகிறது.

இதற்கு 6,000 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மே 8ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும். தகுதி வாய்ந்தவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இதன் விவரங்களை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பார்க்கலாம். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்து உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள், நீண்ட இழுபறிக்கு பின்னர், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்வை, மொத்தம் 12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தனர். குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அது தேர்ச்சி மதிப்பெண்களாக கருதப்படும்.

No comments: