Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 27 April 2014

ஆன்லைன்மூலம் தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறையின் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையல் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் மற்றும் அறிவுரைகளை (பக்கம் 1 முதல் 7 வரை) பதிவிறக்கம் செய்து ஏப்ரல் 28 முதல் மே 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கான சான்றிதழின் நகலுடன் இணைத்து விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வசிக்கும் கல்வி மாவட்டங்களில்  அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் நேரடியாக கொடுக்க வேண்டும்.
கல்வி மாவட்டத்தின் பெயர், ஒருங்கிணைப்பு மையம் என்ற அடிப்படையில் விவரம்:
புதுக்கோட்டை- செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி, கரூர் - நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  அரியலூர்-  அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர் - சிறி ராமகிருஷ்ணா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, திருச்சி - மரக்கடை சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம்- நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாரூர் - கஸ்தூரிபா காந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்-  அரசு மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம்.
ஒருங்கிணைப்பு மையங்களில் கணினி புகைப்படக் கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால் அங்கேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்ன், தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஏற்கெனவே தபால் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
தேர்வுக் கட்டணத்துடன் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50-யும் விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்கும்போது பணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை மே 3-ம் தேதி மாலை 5 மணிவரை ஒருங்கிணைப்பு மையங்களில் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: