இசை, ஓவியம், தையல், நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையல் பிரிவுகளுக்கான அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அரசுத் தொழில்நுட்பத் தேர்வுக்குரிய விண்ணப்பங்களை ஏப்ரல் 28 முதல் மே 3 வரை (மே தினம் தவிர) www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்திசெய்து, அத்துடன் குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றிதழின் நகலினை இணைத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் தேர்வர்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைப்பு மையங்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த மையங்களிலேயே புகைப்படம் எடுக்கும் வசதியும், கட்டணம் செலுத்தும் வசதியும் உள்ளது. ஆன்-லைன் மூலம் இந்த மையங்களில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
தபால் மூலம் விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
நடனத் தேர்வுக்கு கீழ்நிலைக்கு (லோயர்) ரூ.57, மேல்நிலைக்கு (ஹையர்) ரூ.62, இசைத் தேர்வுக்கு கீழ்நிலைக்கு ரூ.27, மேல்நிலைக்கு ரூ.37, ஏனைய பாடங்களுக்கு கீழ்நிலைக்கு ரூ.37, மேல்நிலைக்கு ரூ.47-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தோடு ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50-ஐ ஒருங்கிணைப்பு மையத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
பூர்த்திசெய்த விண்ணப்பங்களை இந்த மையங்களில் மே 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
No comments:
Post a Comment