Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 25 April 2014

தமிழக பொறியியல் கல்வி - கவலைதரும் மாணவர் தேர்ச்சி விகிதம்

தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு பொறியியல் கல்லூரி கூட, 2013 - 14ம் கல்வியாண்டில், முதல் செமஸ்டரில், 90%க்கும் மேற்பட்ட தேர்ச்சி சதவீதத்தை அடையவில்லை என்று தெரியவந்துள்ளது.

தனியான அளவில், ஒரு மாணவர்கூட, 56 கல்லூரிகளில், முதல் செமஸ்டரில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சியடையவில்லை என்பதும் இன்னொரு அதிர்ச்சி தகவல்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட, பொறியியல் கல்லூரிகளின் முதல் செமஸ்டர் முடிவுகளின்படி, அதிகபட்சமாக பெறப்பட்ட தேர்ச்சி விகிதம் 87.45%. RMD பொறியியல் கல்லூரி இந்த தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. முதல் 5 இடங்களில், சென்னையை சாராத 3 கல்லூரிகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு, 25வது தரநிலைக்கும் குறைவாக இருந்த திருச்சி கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி, இந்தாண்டு, 86.07% பெற்று, அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற கல்லூரிகளில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. அதனையடுத்து, சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி 83.76% தேர்ச்சியுடன் மூன்றாமிடம் பெறுகிறது.
திருச்சியின், சாரநாதன் பொறியியல் கல்லூரி, 83.21% தேர்ச்சியுடன், நான்காம் இடத்தையும், ராஜபாளையத்திலுள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 82.82% மதிப்பெண்களுடன் ஐந்தாமிடத்தைப் பெறுகிறது.
அதேசமயம், மாணவர்கள் பெற்றிருக்கும் இந்த மதிப்பெண்களை வைத்து மட்டும், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பிட்டுவிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments: