சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இரண்டு உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை நெம்மேலியில் அமைந்துள்ள உறுப்பு கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.காம். (பொது), பி.காம். (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்), பிசிஏ உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் தேரடி பூந்தோட்டம் தெருவில் அமைந்துள்ள உறுப்புக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. தமிழ், பி.காம்(பொது), பி.காம். (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்), பிசிஏ ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்ப கட்டணம் ரூ. 25: இந்த படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த கல்லூரி அலுவலகங்களிலும், சென்னைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்திலும் மே 7-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். கட்டணம் ரூ.25 செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 23-ஆம் தேதி கடைசி நாளாகும்.
No comments:
Post a Comment