பிற மாநிலங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்காக, தமிழக பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், 364 இடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்த பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் இருப்பதில்லை. அதே போல், சில யூனியன் பிரதேசங்களில், இவற்றிற்கான வாய்ப்புகள் குறைவு. இதை தொடர்ந்து, வட கிழக்கு மாநிலங்கள், லட்சத்தீவுகள், டாமன், டையூ, தாத்ரா நகர் ஹவேலி, அந்தமான்- நிகோபார் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு, கல்லூரிகள் நிறைந்த, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் உள்ள பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வாயிலாக, இடங்களை ஒதுக்கி, மத்திய மனித வள அமைச்சகம் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த வகையில், தமிழகம் சார்பில், 101 பொறியியல் இடங்கள், 263 பாலிடெக்னிக் கல்லூரி இடங்கள், வெளிமாநிலம் மற்றும், மத்திய திபெத்தியன் பள்ளிகள், குழந்தைகள் நல அமைப்பு, மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விரும்பும் மாநிலங்கள், இதுதொடர்பான அறிவிக்கைகளை வெளியிட்டு, மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment