துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இன்று முதல் மூன்றாம் பருவத்தேர்வுகள் துவங்குகின்றன.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 9ம் தேதியுடன் நிறைவடைந்தது. உயர்நிலை மற்றும மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 17ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 21ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஏ.பி.எல்., எனும் செயல்வழிக்கற்றல் முறை உள்ளதால், மாணவர்களின் கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நடப்பதால் ஏப்ரல் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது. ஏப்ரல் 30ம் தேதி பள்ளி வேலைநாளாக செயல்பட்டு, மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment