அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ்-2 தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. தேர்வு முடிவு மே 9-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பின்வரும் இணையதள முகவரிகளில் குறிப்பிட்டு தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்.
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
மேற்கண்ட இணையதளத்தில் www.dge1.tn.nic.in என்ற இணை யதள முகவரியில் ஸ்மார்ட் போன் மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிவை மாணவர்கள் செல்போனில் எஸ்எம் எஸ் மூலம் அறியவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு செல்போன் தகவல் பக்கத்தில் TNBOARD என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இடைவெளிவிட்டு பிறகு பதிவு எண்ணையும் அதைத் தொடர்ந்து பிறந்த தேதி, நாள், ஆண்டு ஆகியவற்றையும் குறிப்பிட்டு (பிறந்த தேதி, நாள், ஆண்டு குறிப்பிடுகையில் இடையில் ஸ்லாஷ் (/) குறியீடு அவசியம்) 92822-32585 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தேர்வு முடிவை நொடியில் அறிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவு வெளியாகும் நாள் அன்று காலை 10 மணிக்குப் பிறகுதான் இந்த வசதி செயல்படத் தொடங்கும். எனவே, அதற்கு முன்பாக எஸ்எம்எஸ் தகவல் அனுப்ப வேண்டாம் என்று மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்தி லும் ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (நிக் சென்டர்), அனைத்து மைய, கிளை நூலகங் களிலும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் இலவசமாக அறிந்து கொள்ளலாம். தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வுமுடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment