அமைச்சர் கபில்சிபல் தலைமையிலான மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் யு.ஜி.சி., நடப்பு 12வது ஐந்தாண்டு திட்ட (2012 17) காலத்திற்கு கல்லூரிகள், பல்கலைகள் மேம்பாட்டிற்கு 49 திட்டங்களை அறிவித்துள்ளது. இதில், தனித்தனியாக பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும், திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெண்கள் கல்வி மையங்கள், மத்திய உதவி பல்கலைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு மையங்கள், விளையாட்டு மேம்பாட்டிற்கு சிறப்பு மையங்கள் உள்ளிட்ட 13 திட்டங்கள் பல்கலை திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. கல்லூரி திட்டங்களில் தன்னாட்சி அங்கீகாரம், கல்லூரி ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு திட்டம், கல்லூரி கருத்தரங்கம், ஆய்வரங்கங்களுக்கான திட்டங்கள் என, ஐந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்கலை, கல்லூரி என, இரண்டிற்கும் சேர்த்து அடிப்படை அறிவியல் ஆய்வு, திறன் மேம்பாட்டு கல்வி, "நெட்" தேர்விற்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கு பயிற்சி, உள்தர உறுதி மையம், சமுதாய கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்பது உட்பட 13 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இது தவிர, தனிப்பட்ட முறையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்காக ஆய்வு திட்டங்கள், ஆய்வு விருதுகள், சுற்றுலா நிதி உள்ளிட்ட 17 திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment