முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வில் குறிப்பிட்ட கேள்விக்கு விடை சரியாக அளித்திருந்ததாக தவறான தகவல் அளித்தவரின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
மனு விவரம்:
எம்எஸ்சி இயற்பியல் மற்றும் பிஎட் படித்துள்ளேன். 2012-2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வில் பங்கேற்றேன்.
150-க்கு 101 மதிப்பெண்கள் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. பணி நியமனத்துக்கு 102 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் நகல் பெற்று பதில்களை ஒப்பிட்டு பார்த்ததில் எனக்கு 102 மதிப்பெண்கள் வருகிறது. எனவே, எனக்கு பணி அளிக்க உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியம் அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. 115 -ஆவது கேள்விக்கு பி என்பது சரியான விடையாகும். இதற்கு விடைத்தாளில் பி என்றே பதிலளித்து இருந்ததாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தேர்வு வாரியம் சமர்ப்பித்த அசல் விடைத்தாளில் மனுதாரர் சி என விடையளித்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து நீதிபதி எம்எம். சுந்தரேஷ், 115 -ஆவது கேள்விக்கு பி என விடையளித்ததாக மனுதாரர் தவறான தகவலை அளித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முற்பட்டுள்ளார் என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment