Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 8 March 2014

CBSE: 12-ம் வகுப்பு தேர்வுத் தேதிகள் மாற்றம்

மக்களவைத் தேர்தல் தேதி அட்டவணையை முன்னிட்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வுக்கான தேதி அட்டவணையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உருதுமொழி, கர்நாடக இசை - வாய்ப்பாட்டு, கர்நாடக இசை- வாத்தியம், ஹிந்துஸ்தானி இசை - வாய்ப்பாட்டு, ஹிந்துஸ்தானி இசை - வாத்தியம் மற்றும் உருது முக்கியப்பாடம் ஆகியவற்றுக்கான தேர்வுகள் ஏப்ரல் 9-ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும்.

மேலும், சமூகவியல், கிராஃபிக் டிûஸன்ஸ், டிடிபி கேட் மற்றும் மல்டி மீடியா- பிஸினஸ் பிராஸஸ் அவுட்சோர்ஸிங் ஸ்கில்ஸ் பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெறும்.
மேலும், ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தத்துவம், தொழில்முனைவு, அலுவலக விதிகள் மற்றும் நடைமுறைகள், நிதி மேலாண்மை மற்றும் வீட்டுப் பாதுகாப்பு, தொடர்பியல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு-2, நூலக நிர்வாகம் மற்றும் மேலாண்மை, கணினி மற்றும் ஆயுள் காப்பீடு நிர்வாகம், சுகாதாரம் மற்றும் நோய்கள், மருத்துவக் கலைச்சொற்களின் அடிப்படை நோக்கம், பேறுகால மருத்துவப் பணி, உணவு சேவைகள்-2, புவியியல்சார் தொழில்நுட்பம், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளன.
வேளாண்மை, படைப்புத் திறன் எழுத்தாற்றல் மற்றும் மொழிபெயர்ப்புக் கல்வி, ஓவியம், வரைகலை, சிற்பக்கலை மற்றும் பயன்பாட்டு கலை - வர்த்தகவியல் கலை ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 17-ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெறும்.
12-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: