மலேசியாவில் உள்ள ஆசிய-இ-பல்கலைக்கழக பட்டங்கள் செல்லாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மலேசியாவில் உள்ள ஆசிய-இ-பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி முறை மூலம் இந்தியாவில் படிப்புகளை வழங்க யுஜிசி-யிடமோ அல்லது தொலைதூர கல்விக் கவுன்சிலிடமோ உரிய அனுமதியைப் பெறவில்லை.
எனவே, இந்த பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் பெறப்படும் பட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பதவிகளுக்குச் செல்லாது எனத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment