Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 29 March 2014

சென்னை பல்கலை: தொலைநிலையில் இளங்கலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்.,7 கடைசி

சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான, 2014 மே மாதத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசி நாளாகும். அபராதத் தொகையுடன் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை www.ideunom.ac.in  இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
ஏனெனில், விண்ணப்பப் படிவங்கள் இனி மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என தொலைதூரக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments: