Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 11 March 2014

10ம் வகுப்பு தனித்தேர்வர்கள்: ஆன்லைனில் நுழைவுச்சீட்டு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் இன்று பிற்பகல் முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 SSLC - MAR - 2014 - PRIVATE CANDIDATE - HALL TICKET 

 SSLC - MAR- 14 EXAMINATION TIMETABLE 


பதிவிறக்கம் செய்யும் முறை:
www.tndge.in  என்ற இணையதளத்தில் “SSLC EXAM MARCH 2014-PRIVATE CANDIDATE – HALL TICKET PRINTOUT-  என “click” செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும், அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதவுள்ள தேர்வர்கள் கவனத்திற்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதவுள்ள தேர்வர்கள் தங்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு மற்றும் அறிவியல் செய்முறை பதிவேடு (record note) ஆகியவற்றுடன் தாங்கள் ஏற்கனவே அறிவியல் செய்முறை பயிற்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரை மார்ச் 17 அன்று பிற்பகல் அணுகி தேர்வு நடத்தப்படும் நாள் பற்றிய விபரம் பெற வேண்டும்.
செய்முறைத் தேர்வுகள் மார்ச் 18 முதல் மார்ச் 22 வரை நடத்தப்படும் ஏற்கனவே செய்முறைப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். மார்ச் 2014 இடைநிலை விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்விற்கான எழுத்துத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 09 வரை நடைபெறும்.
இதற்கான கால அட்டவணையும் www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

No comments: