டெகராடூனில் உள்ள இந்திய அரசின் ராணுவக் கல்லூரியின் படிப்பதற்கான ஜனவரி 2015ம் ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெற உள்ளது.
தகுதி: ராவக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவராக அல்லது 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக் வேண்டும். 13 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் சென்னை உட்பட பல்வறு மையங்களில் நடைபெறும் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
எழுத்துத்தேர்வு ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகிய மூன்று தாள்களை உடையது. எழுத்துத்தேர்வு ஜூன் 1மற்றும் ஜூன் 2ம் தேதி நடைபெறுகிறது. நேர்முகத்தேர்வு அக்.,9ம் தேதி நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை, அனுப்ப வேண்டிய முகவரி ஆகிய தகவல்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment