Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 10 February 2014

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை

விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒர்க்ஷாப் அசிஸ்டன்ட் காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:
விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலிப்பணியிடத்திற்கு குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரசு தொழிற்பயிற்சி நிலையம் அல்லது அங்கிகாரம் பெற்ற நிலையங்களில் வயர்மேன் பயிற்சியில் தேர்ச்சி பெற்று என்.டி.சி சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். அதோடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
உத்தேச பதிவு மூப்பு: கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு நடப்பு தேதி வரையிலும், முன்னாள் மற்றும் தற்போதைய படைவீரர்கள் 28.1.2004 வரையிலும் இருக்க வேண்டும். இக்குறிப்பிட்ட கல்வித் தகுதியுடையவர்கள் தங்களது பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் 13-ம் தேதி வந்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இக்குறிப்பிட்ட தேதிக்கு பின் வருகின்றவர்களின் கோரிக்கைகளை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி தெரிவி்த்துள்ளார்.

No comments: