தருமபுரியில் வருகிற 21-ஆம் தேதி தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்திலுள்ள வேலை வாய்ப்பற்றோருக்கான தனியார்துறை சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வருகிற 21-ஆம் தேதி காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மமி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், சேலம், கோவை, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலுருந்து பல்வேறு நிறுவனங்கள், டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்பு அளிக்க உள்ளனர்.
இந்த முகாமில், 5-ஆம் வகுப்பு முதல், 10, பிளஸ் 2, பட்டம், பட்டயம், தொழில்கல்வி ஆகியவை பயின்ற மற்றும் ஓட்டுநர், தையல், தட்டச்சு, கணினி உள்ளிட்ட பயிற்களை முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும், மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொண்டு பணி நியமனம் பெறும் மனுதாரர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. தொடர்புக்கு 04342-280600.
No comments:
Post a Comment