Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 31 January 2014

சென்னையில் ஆதார் அட்டை : புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் வரை நீட்டிப்பு

தமிழகம் முழுவதும் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி கடந்த ஆண்டு 2011ஆம் ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் இப்பணிகள் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே முடிந்துள்ளதால், மார்ச் வரை புகைப்படம் எடுக்கும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் கணக்கெடுப்புத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணராவ் கூறுகையில், தமிழகத்தில் 71.81 சதவீதம் பேர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்துவிட்டனர். ஆனால், சென்னையில் மட்டும் 56.81 சதவீதம் பேர் மட்டுமே புகைப்படம் எடுத்துள்ளனர். அதாவது, அதாவது 23 லட்சத்து 59 ஆயிரத்து 896 பேர் மட்டுமே புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்களில் 19 லட்சத்து 10 ஆயிரத்து 378 பேருக்கு ஆதார் எண் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இது 80.95 சதவீதம் ஆகும்.
சென்னையுடன் மாநகரின் இணைக்கப்பட்ட புறநகர் பகுதியில் இப்பணி முழுமை அடையவில்லை. இதனால் சென்னையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

No comments: