Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 31 December 2013

குரூப் 1 தேர்வு: மாநகராட்சி இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி மாநகராட்சி சார்பில் அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
 இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: 79 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றிபெற ஏதுவாக சென்னையில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது.
 இதன் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சியை சென்னை மாநகராட்சி கட்டணமில்லாமல் அளித்து வருகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்பும், சென்னை மாநகராட்சிக்குள் படித்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படும்.
 இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், w‌w‌w.c‌h‌e‌n‌n​a‌i​c‌o‌r‌p‌o‌r​a‌t‌i‌o‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பயிற்சி நடைபெறும் சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: