Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 25 November 2013

இந்தியப் புவியியல்

*  புவியியல் அடிப்படையில் இந்தியா தீபகற்பம் எனப்படுகிறது. காரணம் இந்தியா மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலப்பகுதியாலும்(இமயமலை) சூழப்பட்டுள்ளது.
*  புவியின் அடிப்படையில் நோக்கும்போது இந்தியாவை ஒரு கண்டமாகவே கருதலாம். எனினும் அதன் பரப்புக்குறைவால் இதனை துணைக்கண்டம் என்பர்.
*  இந்தியா பரப்பளவில் ஏழாவது மிகப்பெரிய நாடாக உலக அரங்கில் இடம் பெற்றுள்ளது. ரஷ்யா, கனடா, சீனா, அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது.
*  புவியின் நிலப்பரப்பில் 2.4 சதவீதம் பெற்றுள்ளதுடன், 17 சதவீத மக்கள் தொகையையும் பெற்றுள்ளது. இந்தியாவைப் போல் 7 மடங்கு பெரிய நாடாக ரஷ்யா விளங்குகிறது.
*  ஜப்பான் நாட்டைவிட 9 மடங்கு இந்தியா பெரியது. இங்கிலாந்தைப்போல் 13 மடங்கு பெரிய நாடு இந்தியா.
*  இந்தியாவின் பரப்பு பாகிஸ்தானை விட நான்கு மடங் கு அதிகம். அவ்வாறே அமெரிக்காவின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இந்தியா ஆகும்.
*  இந்தியா புவியின்  வட அரைக்கோளப் பகுதியில் அமைந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்திற்கும், குஜராத்திற்கும் இடையில் தல நேரத்தில் 2 மணி நேரம் வேறுபாடு தோன்றுமளவிற்கு இந்தியா மிகப்பெரியது.
*  அருணாச்சலப்பிரதேசத்தில் சூரியன் தோன்றிய பின், சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னரே குஜராத்தில் சூரியன் தோன்றுகிறது.
*  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லையாக இமயமலைகள் விளங்குகிறது. இவ்விரு நாடுகளையும் மக்மோகன் எல்லைக்கோடு பிரிக்கிறது. இக்கோடு இமயமலைகளின் ஊடாகச் செல்கிறது.
*  பாக்ஜலசந்தி இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் எல்லையாக சிரில் ராட்கிளிஃப் எல்லைக்கோடு விளங்குகிறது.
*  மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காள வரிகுடாவும் உள்ளன.
*  அரபிக்கடலில் கேரளாக் கடற்கரையை ஒட்டி அமைந்த இலட்சத்தீவுகள் மற்றும் கிழக்கில் வங்காள விரிகுடாவில் வடக்கு தெற்காக நீண்ட சங்கிலித் தொடராய் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியன இந்தியாவிற்குள் அடங்குகின்றன.
*  இந்தியா ஆசியாக் கண்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சதுர கிலோ மீட்டராகும்.
*  இந்தியாவின் வடக்கு தெற்கு தூரம்3214 கிலோமீட்டர். கிழக்கு மேற்கு தூரம் 2933 கிலோ மாட்டர். தீவுகளை உள்ளடக்கிய இந்தியக் கடற்கரை நீளம் 7516 கிலோ மீட்டர். (இதில் 5700 கிலோ மீட்டர் நீளம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் கடற்கரை நீளமாகும்).
*  இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எல்லை நீளம் 15,200 கிலோ மீட்டர் ஆகும். இந்தியா அதிக அளவு எல்லையை வங்காள தேசத்துடன் கொண்டுள்ளது.
*  இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலங்கள் 1. குஜராத் 2. ஆந்திரப்பிரதேசம்.
*  இந்தியா அமைந்துள்ள அட்ச ரேகை 80 4' 28'' வடக்கு முதல் 370 17' 53'' வடக்கு வரை.
*  இந்தியா அமைந்துள்ள தீர்க்க ரேகை 680 7' 53'' கிழக்கு முதல் 97024' 47'' கிழக்கு வரை.
*  230 1/2 டிகிரி கடக ரேகை இந்தியாவை இரு பிரிவாகப் பிரிக்கிறது. கடக ரேகை செல்லும் மாநிலங்கள் மிசோராம், திரிபுரா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், *  சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் இராஜஸ்தான் ஆகியன.
*  இந்தியாவின் திட்ட நேரம் கிழக்கு தீர்க்க ரேகை 82 1/20 ஆகும். கிரீன் வீச் நேரத்திலிருந்து ஐந்தரை மணி நேரம் வேறுபடுகிறது.
*  இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 43.3 சதவீதம் சமவெளிகளும், 10.7 சதவீதம்  மலைகளும், 18.6 சதவீதம் குன்றுகளும், 27.7 சதவீதம் பீடபூமிகளும் உள்ளன.
*  இந்தியாவின் தென்கோடியில் கன்னியாகுமரி உள்ளது. இந்தியாவின் தென்கிழக்கே இந்திரா முனை உள்ளது.
*  இந்தியா வட அரைகோளப் பகுதியின் கிழக்குப் பகுதியல் உள்ளது.
*  இந்தியாவின் நுழைவாயில் எனப்படுவது மும்பை ஆகும். கடகரேகை இந்தியாவை தீபகற்ப இந்தியா, புறதீபகற்ப இந்தியா என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கிறது.
*  வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனிச்சிறப்பு ஆகும். எனவே தான் வேற்றுமையிலுள்ளும் ஒற்றுமை என்று பண்டித ஜவகர்லால் நேருவின் கூற்றிற்கு இந்தியா இலக்கணமாக அமைந்துள்ளது.

No comments: