நன்னூல்
* இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். நஅனூல் என்பது தொல்காப்பியத்தின் வழிநூல் ஆகும்.
* தொல்காப்பியம் என்பது அகத்தியம் என்ற நூலின் வழிநூல் என்பர்.
* நன்னூல் இரண்டு அதிகாரங்களைக் (எழுத்து, சொல்) கொண்டது. முன்னூல் என்பது தொல்காப்பியம் பின்னூல் என்பது நன்னூல்.
* அறம், பொருள், இன்பம், வீடு அடைதலே நூலின் பயனாகும்.
கிறிஸ்துவமும் தமிழும்
* வீரமாமுனிவர்: இத்தாலி நாட்டு பாதிரியாரான வீரமாமுனிவரின் காலம் (1680 - 1746).
* இயற்பெயர் - கான்ஸ்டாண்டியஸ் ஜோசப் பெஸ்கி. மதுரைச் சங்கத்தார் அளித்த தைரியநாதர் என்ற பட்டப்பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். * தொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம்) சதுரகாதி (தமிழின் முதல் அகராதி) (தமிழகராதியின் தந்தை வீரமாமுனிவர்), தேம்பாவணி, பரமார்த்த குரு கதை (தமிழின் முதல் ஏளன நூல்) போன்ற நூல்களை இயற்றியவர்.
* ஜி.யு.போப் (1820 - 1907): இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததுடன், நாலடியார், திருவாசகம், சிவஞானபோதம் ஆகியவற்றையும் மொழி பெயர்த்துள்ளார்.
* தமிழ் மொழி பெயர்ப்புத் துறைக்கு வழிகோலியவர். தம் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்க வேண்டு குறிப்பிட்டவர்.
* கால்டுவெல் (1815 - 1891): அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு திராவிட மொழிகள் என்று பெயரிட்டார். திருநெல்வேலிச்சரித்திரம், தாமரைத் தடாகம், ஞானஸ்தானம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
* சீகன் பால்கு (1683 - 1719): ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர் தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவினார். இதுவே இந்தியாவின் முதல் அச்சுக்கூடம். முதன் முதலில் அச்சேறிய மொழி தமிழ் ஆகும். தமிழில் முதலில் அச்சிடப்பட்டது தமிபிரான் வணக்கம் என்ற நூல். பைபிளைத் தமிழில் முதன் முதலாக மொழி பெயர்த்தவர். தமிழ்-இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு செய்யதுடன், தமிழ்-இலத்தீன் அகராதி எழுதியவர்.
* இராபர்ட்-டி-நொபிலி (1577-1656): இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் தத்துவ போதகர் என்று அறியப்படுகிறார். ரோம் பிராமணன், ராஜ சன்யாசி என்று தன்னைக் கூறிக்கொண்டவர். மந்திரமாலை, ஞானதீபிகை, ஏசுநாதர் சரித்திரம் போன்றவை இவரது நூல்கள்.
* எல்லீஸ்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் சென்னைக் கல்விச் சங்கத்தை நிறுவியவர். முத்துசாமிப் பிள்ளை என்பவர் மூலம் வீரமாமுனிவரின் நூல்களைத் திரட்டி வெளியிட்டவர்.
* லேசரஸ்: இவர் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பழமொழிகள் கொண்ட பழமொழி அகராதியை உருவாக்கியவர் ஆவார்.
நிகண்டுகள்
* நிகண்டு என்பதற்கு சொற்தொகுதி, சொற்பொருள் என்று பொருள். தொல்காப்பிய உரியியல் நிகண்டு போன்றது.
* உரியியல் வளர்ச்சி நிகண்டு எனலாம். தமிழின் முதல் நிகண்டு நூல் திவாகர நிகண்டு. இதன் ஆசிரியர் திவாகர். இது ஆதி நிகண்டு எனப்படும்.
* பிங்கல நிகண்டின் ஆசிரியர் பிங்கல முனிவர்.
* உரிச்சொல் நிகண்டின் ஆசிரியர் காங்கேயர்
* சூடாமணி நிகண்டின் ஆசிரியர் மண்டல புருடர்.
* அகராதி நிகண்டின் ஆசிரியர் ரேவண சித்தர்.
* முதல் எழுத்து அகர வரிசையில் அமைந்த தமிழின் முதல் நூல் அகராதி நிகண்டு. நிகண்டில் 12 தொகுதிகள் இருக்கும்.
* கவிஞர் வைரமுத்து எழுதிய முக்கிய நூல்கள்:
வைரமுத்துவின் முதல் கவிதை இளநெஞ்சின் ஏக்கம். இவரது முதல் கவிதைத் தொகுப்பு வைகறை மேகங்கள். பிற நூல்கள் - கவிராஜன் கதை, தண்ணீர்தேசம், திருத்தி, எழுதிய தீர்ப்புக்கள், இன்னொரு தேசிய கீதம், கொடி மரத்தின் வேர்கள், என் மெளனத்தின் சப்தங்கள், இதுவரை நான், கல்வெட்டுக்கள், வேள்வியால் ஒரு வேள்வி, வானம் தொட்டுவிடும் தூரந்தான், மீண்டும் என் தொட்டிலுக்கு போன்றவை இவரின் நூல்கள்.
* தமிழ் இணையப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - சென்னை
* குருதேவ் என்ற அடைமொழியால் குறிப்பிடப்படுபவர் - இரவீந்திரநாத் தாகூர்.
* அனுமன் பிள்ளைத் தமிழ் இயற்றியவர் - அருணாச்சலக் கவிராயர்.
* அண்ணா என்ற பத்திரிக்கையைத் துவங்கி நடத்திய கட்சி - அ.தி.மு.க
* தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1981
* பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1982
* பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1982
* அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1984.
* அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1985.
* பாரதியாருக்கு பாரதி என்ற பட்டத்தை அளித்தவர்கள் - எட்டயபுரம் சமஸ்தானப்புலவர்கள்.
No comments:
Post a Comment