சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டப் படிப்பு பயில்வோர், தேர்வு மைய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள், தேர்வு எழுதும் மையத்திற்கான விவரங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் வீட்டிற்கு தேர்வு மைய விவரங்கள் வரும் வரை காத்திருக்காமல், பல்கலைக்கழக இணையைதளத்தில் தேர்வு மைய விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அவரவர் வீட்டு முகவரிக்கு அனுப்பப் பட மாட்டாது. சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் 10 நாட்களுக்கு முன்னதாக நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு மைய விவரங்கள் அறிய www.ideunom.ac.in/centernote.asp என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment