பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு ஆன் லைனில் விடைத்தாள் நகல் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகலை வியாழக்கிழமை முதல் தேர்வுத் துறை யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விடைத்தாள் நகல்
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதி விடைத் தாள் நகல் பெற 4.11.2013 முதல் 8.11.2013 வரை விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 28-ம் தேதி (இன்று) முதல் 30-ம் தேதி வரை விடைத்தாள் நகலை www.examsonline.co.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்வதற்கு மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதி, மதிப்பெண் சான்றிதழில் உள்ள டி.எம்.ஆர்.கோடு எண் ஆகியவற்றை பதிவுசெய்ய வேண்டும். ஏற்கெனவே மறுகூட்டல் கோரி விண்ணப்பித்த தேர்வர்களுக்கு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
மறுகூட்டல்-மறுமதிப்பீடு
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் மட்டும், விடைத்தாளின் நகலை பதிவிறக்கம் செய்த பின்னர், மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதற்குரிய விண்ணப்ப படிவத்தை தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tndge.in) 28-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய கட்டணத்துடன் (ரொக்கமாக) சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment