Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 21 October 2013

TRB - PG ASST சான்றிதழ் சரிபார்ப்புக்கு தடையேதும் இல்லை!... ஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை - உயர்நீதிமன்றம்

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு  வகுப்புவாரி  இடஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள்  அனைவரும்  அழைக்கப்படவில்லை.வயதில்  மூத்தோர்  மட்டுமே  அழைக்கப்பட்டுள்ளனர். இதனை  எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில் நெல்லை  மாவட்டத்தைச் சேர்ந்த  இரு  தேர்வர்களும்  இராமநாதபுரம் மாவட்டதைச்  சேர்ந்த ஒருவர் என 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன இவ்வழக்குகள் இன்று  (21 அக்) நீதியரசர்   நாகமுத்து அவர்கள் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்புஆனால் இறுதிப்பட்டியல் வெளியிட தடை.

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற கிளை மறுத்துள்ளது. ஆனால் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் வெளியிடவுள்ள இறுதிப்பட்டியலுக்கு தடை விதித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு நீதியரசர் தடையேதும் விதிக்கப்படாததால் நாளை முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்...

No comments: