Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 15 October 2013

மருத்துவ மாணவர்களுக்குக் கூடுதல் இடங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு நடப்பு ஆண்டு 561 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் புதிதாகக் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை, சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 410 இடங்களை அதிகரித்து இந்திய மருத்துவக் கழகம் உத்தரவு வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசு ஒதுக்கீடு பெற்ற மாணவர்களில் 75 பேர் கல்லூரிகளில் சேராததால் அந்த இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு சேர்த்து வழங்கப்பட்டது. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கைக்கு நடப்பு ஆண்டு 76 இடங்கள் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013-14ஆம் ஆண்டில் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 555 இடங்கள், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆயிரத்து 560 இடங்கள் என மொத்தம் 31 கல்லூரிகளில் 4 ஆயிரத்து 115 இடங்கள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: