தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 7 இடங்களில் அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 7 ஆயிரத்து 800ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சட்டம் சார்ந்த படிப்புகளை படிக்கின்றனர். 110க்கும் மேற்பட்டோர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு னீ500 ஊதியமாக வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 30 மணி நேரம் வகுப்பு எடுக்கின்றனர். வகுப்பு முடிந்ததும் இவர்கள் கல்லூரியை விட்டு சென்று விடுவர். இதனால் நிர்வாக பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக நிரந்தர விரிவுரையாளர்களை நியமனம் செய்ய பல்கலை. தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு அனுமதி பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விபரங்கள் தற்போது ஆசிரியர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment