Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 21 October 2013

தமிழகத்தில் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு

அண்மையில் நடந்து முடிந்த தகுதித் தேர்வு மூலம் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாட வாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
13 ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கடந்த ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தகுதித்தேர்வை ஆறரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. தேர்வு முடிவுகளை ஒரு வாரத் தில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த தகுதித்தேர்வு மூலம் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் மட்டும் 10 ஆயிரம் அடங்கும். மீதமுள்ள 3 ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆகும்.
பாடவாரியாக கணக்கெடுப்பு பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் பள்ளிக் கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, நகராட்சி பள்ளிகள், சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சி என பல்வேறு துறைகளில் இருந்து வந்துள்ளன.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாகவும், துறைவாரியாகவும் கணக்கெடுக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணி முடிந்தவுடன் தகுதித்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: