ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ள அச்சகத்தில் தான் , கேள்வித்தாளை அச்சடித்தோம். "செக்யூரிட்டி பிரஸ் ' என , கூறப்படும் இதுபோன்ற அச்சகங்களில் , கேள்வித்தாள்கள் தவிர , வேறு எதுவும் அச்சிடப்படாது. கேள்விகள் கலக்கப்பட்டு , பின் , " ஏ.பி.சி.டி. ,' என , நான்கு பிரிவாக அச்சடிக்கப்பட்டன. இதில் , " பி ' வகை கேள்வித்தாளில் தான் , எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. கம்ப்யூட்டரில் , " பான்ட் ' கோளாறு ஏற்பட்டதால் , எழுத்துப்பிழை ஏற்பட்டதாக , அச்சகம் தெரிவித்துள்ளது. அச்சடிப்பதற்கு முன் , அச்சகத்தில் உள்ள பாட வாரியான நிபுணர்கள் , கேள்விகளை சரிபார்ப்பர் ; அச்சடிக்கப்பட்டபின் , சரிபார்ப்பது கிடையாது. அப்படியே , சீலிடப்பட்டு அனுப்பப்படும். நடந்த குளறுபடிக்கு , அச்சகம் தான் காரணம். இதற்காக , சம்பந்தபட்ட அச்சகத்தின் மீது , கடும் நடவடிக்கை எடுக்கப்படும். "பில் ' தொகையில் , 25 சதவீதம் வரை , அபராதம் விதிப்பது , அந்த அச்சகத்தை , " கறுப்பு பட்டியலில் ' சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கை குறித்து , ஆலோசித்து வருகிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு , டி.ஆர்.பி. , வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment