சென்னையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வையற்ற பட்டதாரிகளுடன், சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணி நியமனம் குறித்து கல்வித்துறையிடம் பேசிய பின்னரே தீர்மானிக்க முடியும் என்பதால் அதற்கு அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுபோல் பலமுறை அவகாசங்கள் கோரப்பட்டு, ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர். உரிய தீர்வுகள் ஏற்படாதவரை போராட்டங்கள் தொடரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்
No comments:
Post a Comment