Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, 28 June 2013

தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியீடு


நடப்பு கல்வி ஆண்டில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்டியலை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
List of Self Financed Teacher Training Institutes

PDF2013-2014-ஆம் கல்வியாண்டில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் பட்டியல்.

PDF2011-2012 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துள்ள தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்.

PDF2011-2012 ஆம் கல்வி ஆண்டில் தென்மண்டல தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் பட்டியல்

மாநிலம் முழுவதும், 560 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்) உள்ளன. இவற்றில், பல பள்ளிகள், மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர, 4,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

ஜூலை முதல் வாரத்தில், "ஆன்-லைன்" வழியாக, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் எவை என்ற விவரங்களை, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம், தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

www.tnscert.org என்ற இணைய தளத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியின் முகவரி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு, அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இது, ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர முடிவு செய்துள்ள மாணவருக்கு, பெரிதும் உதவியாக இருக்கும்.

No comments: