Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 5 June 2013

ஆசிரியர் தகுதி தேர்வு இரு வண்ணங்களில் விண்ணப்பம் அரசு பள்ளிகள் மூலம் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 2 வண்ணங்களில் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை, 1 ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 21ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில், தேர்வுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நேற்று நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவொளி தலைமை வகித்தார். இணை இயக்குநர் சேதுராமன் வர்மா, துணை இயக்குநர் பூபதி ஆகியோர் ஆலோசனை அளித்தனர். 

திருச்சி உட்பட 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், 66 மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் குழப்பமின்றி தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பவது. திட்டமிட்டபடி தேர்வை சிறப்பாக நடத்துவது. தேர்வுப் பணிகளை மேற்கொள்ளும் போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டிஇடி) வரும் 17ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. 

கல்வித்துறை அலுவலர்களின் பணிச்சுமையைக் குறைப்பது, குழப்பத்தை தவிர்க்கும் வகையில் புது முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்படி, வழக்கமாக மாவட்டக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்ப விநியோகம் செய்யப்படும். இனி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். அரசு மேல்நிலைப்பள்ளிகள் இல்லாத பகுதிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். அதேபோல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு தனித்தனி விண்ணப்பங் களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக இரண்டு வண்ணங்களில் விண்ணப்பம் அச்சிடப்பட்டு, விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

No comments: