Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 25 May 2013

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவுகள் 27ம் தேதி வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியாகிறது. எனினும், சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும், முன்கூட்டியே, இன்று காலை வெளியாகலாம் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.


கடந்த மார்ச்சில், பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, அந்தமான் -நிகோபார், கோவா ஆகிய மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுதினர்.

இதன் முடிவுகளை, பல நாட்களாக, மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, 20 நாட்களுக்கு மேல் ஆகின்றன. பொறியியல், மருத்துவம் படிப்புகளில் சேர, கடந்த, 20ம் தேதி வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கலந்தாய்வு, விரைவில் துவங்க உள்ளது. 

இதனால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவை, மாணவர்கள், ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், வரும், 27ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மாணவர்கள், தேர்வு முடிவை, http://www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

1 comment:

way2sms login said...

Thanks for having such information....
Way2sms login