Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 5 September 2012

CBSE-NTSE


கல்வி உதவித்தொகை: செப்.7 வரை விண்ணப்பிக்கலாம்

   தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

   தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்வு, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், வரும் நவம்பர் 18ம் தேதி நடக்கிறது.

  இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள, அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க, வரும் 7ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments: