Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 27 August 2012

பத்தாம் வகுப்பு மறுகூட்டல்: 27 முதல் விண்ணப்பிக்கலாம்

   பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு குறித்து, மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர், 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

   ஜூன், ஜூலையில், எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக்., - ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி.,க்கு, உடனடித் தேர்வு நடந்தது. தேர்வில், மறுகூட்டல் செய்ய விரும்பும் தேர்வர், www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக, 27ம் தேதியில் இருந்து, 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

  ஒவ்வொரு பாடத்திற்கும், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இரு தாள் கொண்ட பாடங்களுக்கு, 305 ரூபாய் வீதம்; ஒரு தாள் கொண்ட பாடங்களுக்கு, தலா, 205 ரூபாய் வீதம், கட்டணம் செலுத்த வேண்டும். பிளஸ் 2 உடனடித் தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், விடைத்தாள் நகல் பெற்று, மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டல் கோரி, 27ம் தேதி முதல், 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

   மறு மதிப்பீட்டிற்கு, மொழிப் பாடத்திற்கு, 1,010 ரூபாய். இதர பாடம் ஒவ்வொன்றிற்கும், 505 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு, மொழிப்பாடம், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களுக்கு, தலா 305 ரூபாய்; இதர பாடங்களுக்கு, தலா 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 

   இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்துச் சீட்டை பதிவிறக்கம் செய்து, சம்பந்தபட்ட வங்கியில், கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments: