Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 17 May 2012

TNTET- TAMIL

TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2012
ஆசிரியர் தகுதித் தேர்வு -- -தமிழ்
முதல்தாள் மற்றும் இரண்டாம்தாள் விளக்கப்பாடம்

•  விலங்குகளின் இளமைப் பெயர்கள்: அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.
•   விலங்குகள், பறவைகள் தங்குமிடம்: குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.
•   விலங்குகள், பறவைகள் ஒலி - அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.
•    காய்களின் இளமைப் பெயர்கள் - அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு.
•    சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம்.
•    சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர்.
•    இறைவை - நீர் இறைக்கும் கருவி
•    பசுந்தாள் - பசுமையான இலை தழைகள்
•    மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம்.
•    தமிழக அடையாளங்கள்  - மரம் :  பனை மரம், மலர் - செங்காந்தள் மலர், விலங்கு - வரையாடு, பறவை - மணிப்புறா.
•   ஒன்பது மணிகள் - முத்து, பவளம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், ரத்தினம், வைரம், வைடூரியம், கோமேதகம்.
•   மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்; சேரர்களின் மாலை - பனம்பூ மாலை, சோழர்களின் மாலை - அத்திப்பூ மாலை, பாண்டியர்களின் மாலை - வேப்பம்பூ மாலை.
•    நால்வகைப்படைகள் - காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை.

பதினெண்கீழ்க்கணக்கு:
•    நாலடியார் நூல்களுள் ஒன்று
•    மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது.
•    நாலடி நானூறு என்பது இதன் சிறப்புப் பெயர்.

தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் (புகலிடங்கள்)
•    வேடந்தாங்கல்
•    கரிக்கிளி (காஞ்சிபுரம் மாவட்டம்)
•    கஞ்சிரங்குளம்
•    சித்திரங்குடி
•    மேல்செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
•    பழவேற்காடு (திருவள்ளூர் மாவட்டம்)
•    உதயமார்த்தாண்டம் (திருவாரூர் மாவட்டம்)
•    வடுவூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
•    கரைவெட்டி (பெரம்பலூர் மாவட்டம்)
•    வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்)
•    வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
•    கூந்தன்குளம்(திருநெல்வேலி மாவட்டம்)
•    கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்)

மதுரையில் வாழ்ந்த சங்கப்புலவர்கள் - நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார்.
இருபதாம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு புத்துயிர் ஊட்டியவர்கள் - பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்.

பரிதிமாற் கலைஞர்
•    இயற்பெயர் - சூரிய நாராயண சாஸ்திரி.
•    இவரது காலம் - 1870  - 1903.
•    ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் ஆகியவை இவர் இயற்றிய நாடகங்கள்.
•    நாடக இலக்கணங்களைத் தொகுத்து, நாடகவியல் எனும் நூலை எழுதினார்.
•    மானவிஜயம் நாடகம் களவழி நாற்பது எனும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.

சங்கரதாசு சுவாமிகள்
•    இவரது காலம் 1867 - 1920
•    வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோசனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு, பவளக்கொடி உள்ளிட்ட நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.

பம்மல் சம்பந்தனார்
•    இவரது காலம் - 1875 - 1964.
•    மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு உள்ளிட்ட 94 நாடகங்களை இயற்றியுள்ளார்.
•    சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி வாணிபுரத்து வணிகன், விரும்பிய விதமே, அமலாதித்தியன் முதலிய நாடகங்களைப் படைத்தார்.

தாவரங்கள் : காய்களின் இளமை மரபு
•    அவரைப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வாழைக்கச்சல், வெள்ளரிப்பிஞ்சு, கொய்யாப்பிஞ்சு, பலாமூசு, தென்னங்குரும்பை.

விலங்குகள் : இளமை மரபு
• குருவிக்குஞ்சு, கோழிக்குஞ்சு, ஆட்டுக்குட்டி, கழுதைக்குட்டி, எருமைக்கன்று, குதிரைக்குட்டி, பன்றிக்குட்டி, குரங்குக்குட்டி, மான்கன்று, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, யானைக்கன்று, புலிப்பறழ், கீரிப்பிள்ளை.

ஒலி மரபுச் சொற்கள்:
•  குயில் கூவும், மயில் அகவும், சேவல் கூவும், காகம் கரையும், கிளி கொஞ்சும், கூகை குழறும், வானம்பாடி பாடும், கோழி கொக்கரிக்கும், நாய் குரைக்கும், பன்றி உறுமும், யானை பிளிறும்.

வினை மரபுச் சொற்கள்:
•   அப்பம் தின், காய்கறி அரி, இலை பறி,  நெல் தூற்று, களை பறி, பழம் தின், நீர் பாய்ச்சு, பாட்டுப்பாடு, மலர் கொய், கிளையை ஒடி, மரம் வெட்டு, விதையை விதை, நாற்று நடு, படம் வரை, கட்டுரை எழுது, தீ மூட்டு, விளக்கேற்று, உணவு உண்.
பஞ்சகவ்யம் என்பது - கோமியம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்கள் சேர்ந்த கலவை. இதனை பயிரில் தெளித்தால் புழு, பூச்சிகள் பயிரை நெருங்காது.
• முதல் வேற்றுமை உருபு என்பது - இயல்பான பெயர், பயனிலையைக் கொண்டு முடிவது முதல் வேற்றுமை எனவும், எழுவாய் வேற்றுமை எனவும் வழங்கப்படும்.
•  இரண்டாம் வேற்றுமை உருபு என்பது - ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு ஆகும். வளவன் செய்யுளைப் படித்தான். இத்தொடரில் உள்ள செய்யுள் என்னும் பெயர்ச்சொல் ‘ஐ’ என்னும் உருபையேற்றுச் செய்யப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுகிறது.
•    மூன்றாம் வேற்றுமை உருபு - ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்.
•    நான்காம் வேற்றுமை உருபு - கு.
•    ஐந்தாம் வேற்றுமை உருபு - இல், இன்.
•    ஆறாம் வேற்றுமை உருபு - அது
•    ஏழாம் வேற்றுமை உருபு - கண், உள், மேல், கீழ்
•    எட்டாம் வேற்றுமை உருபு - இதற்கு உருபு இல்லை. இதனை விளி வேற்றுமை என்பர். எடுத்துக்காட்டு: கந்தா வா!
•    போலி:
•    மூன்று வகைப்படும். 1.முதற்போலி, 2. இடைப்போலி, 3.இறுதிப்போலி.
•    முதற்போலி:  ஒரு சொல்லின் முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது வருவது முதற்போலி - எ.டு. மஞ்சு - மைஞ்சு; மயல் - மையல்.
•    இடைப்போலி : ஒரு சொல்லின் இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இடைப்போலி. எ.டு. முரசு - முரைசு, அரசியல் - அரைசியல்.
•   இறுதிப்போலி: ஒரு சொல்லின் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாது இருப்பது இறுதிப்போலி (கடைப்போலி என்பர்) - எ.டு. - அறம் - அறன், பந்தல் - பந்தர்.
ஓவியம்:
•    ஓவியக் கலைக்கு மற்ற பெயர்கள்: ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி.
•   ஓவியக் கலைஞர்களின் மற்ற பெயர்கள்: ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன்.
•    ஓவியக் கலைஞரின் குழுவின் பெயர் - ஓவிய மாக்கள்; ஆண் ஓவியர் - சித்திராங்கதன், பெண் ஓவியர் - சித்திரசேனா.
•    ஓவியம் வரையும் இடம்: சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம்.

அகரமுதலி:
•    அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் அகரமுதலி என வழங்கப்படுகிறது.
•    தமிழ் அகரமுதலி வரலாற்றில் செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள் துறை நூல்கள் நிகண்டுகளாகும்.
•    நிகண்டுகளின் பழமையானது - சேந்தன் திவாகரம்.
•    சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் - திவாகரர்.
•    மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை - 25
•    நிகண்டுகளின் சிறப்பானது - சூடாமணி நிகண்டு
•    சூடாமணி நிகண்டுவை இயற்றியவர் - மண்டலப்புருடர்
•    வீரமாமுனிவர் தொகுத்த சதுரகாதியே தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி.
•    சதுரகாதி வெளிவந்த ஆண்டு - கி.பி.1732.
•    சதுரகாதியில் பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு வகைகளில் தனித்தனியாகப் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
•    தமிழ் - இலத்தீன் அகராதி, இலத்தீன் - தமிழ் அகராதி, தமிழ் - பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு - தமிழ் அகராதி, போர்த்துக்கீசிய - இலத்தின் தமிழ் அகராதி ஆகிய அகர முதலிகளை உருவாக்கியவர் வீரமாமுனிவர்.
•    தமிழ் - தமிழ் அகராதி லெவி - ஸ்பால்டிஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
•   அபிதான கோசம் என்பது தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி ஆகும். இது 1902ஆம் ஆண்டு வெளியானது.
• அபிதான சிந்தாமணி - இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப் பொருள்களையும், முதன்முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை தொகுத்து வெளியிட்டவர் சிங்காரவேலனார்.
• பொது அறிவு, உளவியல், புவியியல், புள்ளியியல், வரலாறு, வானவியல் முதலிய துறைகளுக்கு கலைச்சொல் அகரமுதலிகள் 1960ஆம் ஆண்டு தொகுக்கப்பட்டன. மணவை முஸ்தபா அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்.
•    அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன்
•    இயற்பெயர் - கனக சுப்புரத்தினம். ஊர்: புதுச்சேரி
•    பெற்றோர் - கனகசபை - லட்சுமி
•    காலம் - 29 - 04 - 1891      -     21-04-1964.
•    இயற்றிய நூல்கள் - சஞ்சீவி பர்வதத்தின் சாரல், இசையமுது, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
•    சிறப்புப் பெயர்கள் - புரட்சிக் கவிஞர், பாவேந்தர்

நாமக்கல் கவிஞர்.வெ.இராமலிங்கம்
•    பெயர் - இராமலிங்கம்
•    பெற்றோர் - வெங்கடராமன் - அம்மணி அம்மாள்
•    பிறப்பிடம் - மோகனூர் (நாமக்கல் மாவட்டம்)
•    காலம் - 19.10.1888 - 24.08.1972
•    சிறப்பு: விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு அரசவைக் கவிஞர். கதை, கவிதைகளை எழுதித் தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர்.

கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை
•    இயற்பெயர் - தேசிக விநாயகம் பிள்ளை
•    சிறப்புப் பெயர் - கவிமணி
•    பெற்றோர் - சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி
•    பிறந்த ஊர் - தேரூர் (கன்னியாகுமரி மாவட்டம்)
•    காலம் - 27.08.1876 - 26.09.1954
•    இயற்றிய நூல்கள் - மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உரைமணிகள், மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள்.

திருவள்ளுவர்
•    காலம் - கி.மு. 31
•    வேறு பெயர்கள் - தெய்வப் புலவர், செந்நாப் போதார், பொய்யில் புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர்.
•    இவர் எழுதியது - திருக்குறள் (மொத்தம் 133 அதிகாரங்கள். அதிகாரத்திற்கு 10 குறள்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
•    திருக்குறளுக்கு வேறு பெயர் - முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை.

கம்பர்:
•    இயற்பெயர் - கம்பர்
•    பிறந்த ஊர் - தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது
•    தந்தை பெயர் - ஆதித்தன்
•    போற்றியவர் - சடையப்ப வள்ளல்.
•    இயற்றிய நூல்கள் - கம்பஇராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
•    காலம் - பன்னிரெண்டாம் நூற்றாண்டு

தாயுமானவர்
•    பெயர் - தாயுமானவர்
•    பெற்றோர் - கேடிலியப்பர் - கேசவல்லி அம்மையார்
•    மனைவி - மட்டுவார்குழலி
•    ஊர் - நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்)
•    பணி- திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்.
•    காலம் - கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு
•    நூல் - தாயுமானவர் திருப்பாடல் திரட்டு

குமரகுருபரர்
•    இயற்பெயர் - குமரகுருபரர்
•    ஊர் - திருவைகுண்டம் (தூத்துக்குடி மாவட்டம்)
•    பெற்றோர் - சண்முக சிகாமணிக் கவிராயர், - சிவகாம சுந்தரி.
•    சிறப்பு - இளமையில் கவிபாடும் ஆற்றல் பெற்றவர்
•  இவர் எழுதிய நூல்களின் பெயர் - நீதிநெறி விளக்கம், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம்.

தணிகை உலகநாதன்
•    பெயர்  - தணிகை உலகநாதன்
•    ஊர் - திருவத்திபுரம், வேலூர் மாவட்டம்
•    பெற்றோர் - தா.தணிகாசலம் - சுந்தரம் அம்மையார்
•    காலம் - 01.10.1921 - 19.11.1993
•    இயற்றிய நூல்கள் - பூஞ்சோலை, தேன்சுவைக் கதைகள், பாடும் பாப்பா, மாணவர் தமிழ் விருந்து, சிறுவர் நாடக விருந்து.

ராமலிங்க அடிகளார்
•    சிறப்புப் பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
•    பிறந்த ஊர் - மருதூர் (கடலூர் மாவட்டம்)
•    பெற்றோர் - ராமையா - சின்னம்மையார்
•   இவர் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம். இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் திருவருட்பா எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
•    வாழ்ந்த காலம் - 5.10.1823 - 30.01.1874

தமிழ்தாத்தா உ.வே.சா.
•    இயற்பெயர் - வேங்கடரத்தினம்
•    பிறந்த ஊர் - உத்தமதானபுரம் (திருவாரூர் மாவட்டம்)
•    சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் உ.வே.சா.வின் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
•    காலம் - 19.02.1855 - 28.04.1942
•    தமிழ்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் - என் சரிதம்
•    உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் - எட்டுத்தொகை 8, பத்துப்பாட்டு 10, சீவகசிந்தாமணி 1, சிலப்பதிகாரம் 1, மணிமேகலை 1, புராணங்கள் 12, உலா 9, கோவை 6, தூது 6, வெண்பா நூல்கள் 13, அந்தாதி 3, பரணி 2, மும்மணிக்கோவை 2, இரட்டை மணிமாலை 2, இதர பிரபந்தங்கள் 4.

திரு.வி.கலியாணசுந்தரனார்
•    இயற்பெயர்: திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க.
•    பெற்றோர் : விருத்தாசலனார் - சின்னம்மையார்.
•    ஊர் - துள்ளம் (காஞ்சிபுரம் மாவட்டம்)
•    சிறப்புப் பெயர் - தமிழ்த்தென்றல்
•    படைப்புகள் : மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு.
•    காலம் : 26.08.1883 - 17.09.1953

முதுமொழிக்காஞ்சி
•    ஆசிரியர்  - மதுரைக் கூடலூர்கிழார்
•    பிறந்த ஊர் - கூடலூர்
•    நூல் குறிப்பு - காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று
•    இந்நூலின் வேறொரு பெயர் - அறவுரைக்கோவை
•    மொத்தம் பத்து அதிகாரங்கள் உண்டு. நூறு பாடல்களால் ஆனது.
•    திரிகடுகம் - நல்லாதனார் (ஆசிரியர்), திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊரில் பிறந்தவர்.

இரட்டுற மொழிதல்
•    ஆசிரியர்: காளமேகப் புலவர்.
•    பிறந்த ஊர் - கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக் கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்.
•    இயற்பெயர் - வரதன்

நான்மணிக்கடிகை
•    இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
•    கடிகை என்றால் அணிகலன்
•    நூலாசிரியர் பெயர் - விளம்பிநாகனார்
•    விளம்பி என்பது ஊர்ப்பெயர் ; நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

பழமொழி நானூறு
•    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
•    நானூறு பாடல்களைக் கொண்ட நூல் இது
•    ஆசிரியர் பெயர் - முன்றுறை அரையனார். முன்றுறை என்பது ஊர்ப்பெயர், அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.

சிந்தனையாளர்கள்; கவிஞர்கள்
•    ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்
•    மில்டன் - ஆங்கிலக் கவிஞர்
•    பிளேட்டோ - கிரேக்கச் சிந்தனையாளர்
•    காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்
•    டால்ஸ்டாய் - ரஷ்யநாட்டு எழுத்தாளர்
•    பெர்னார்ட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்

தமிழ் எழுத்துக்களின் மாத்திரை அளவு:
•    மெய்யெழுத்து - அரை மாத்திரை
•    உயிரெழுத்து (குறில்) - ஒரு மாத்திரை
•    உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
•    உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை
•    உயிர்மெய் (நெடில்) - இரு மாத்திரை

காலங்கள் மூன்று வகைப்படும்
•    இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

தாவர உறுப்புப் பெயர்கள்:
•  ஈச்ச ஓலை, தாழை மடல், பனையோலை, சோளத்தட்டை, தென்னையோலை, பலா இலை, மாவிலை, மூங்கில் இலை, வாழை இலை, வேப்பந்தழை, கமுகங்கூந்தல், நெற்றாள்.
•    செடி, கொடி மரங்களின் தொகுப்பிடம்:
•    ஆலங்காடு, சவுக்குத்தோப்பு, தென்னந்தோப்பு, கம்பங்கொல்லை, சோளக்கொல்லை, தேயிலைத்தோட்டம், பனந்தோப்பு, பலாத் தோப்பு, பூஞ்சோலை.

பொருள்களின் தொகுப்பு:
•    ஆட்டு மந்தை, கற்குவியல், சாவிக்கொத்து, திராட்சைக்குலை, வேலங்காடு, பசு நிரை, மாட்டு மந்தை, யானைக் கூட்டம், வைக்கோற்போர்.

பொருளுக்கேற்ற வினைமரபு:
•    சோறு உண், நீர்குடி, பால் பருகு, பழம் தின், பாட்டுப்பாடு, கவிதை இயற்று, கோலம் இடு, தயிர் கடை, விளக்கை ஏற்று, தீ மூட்டு, படம் வரை, கூரை வேய்.

குற்றியலுகரம்
•    குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம்.
•    கு,சு,டு,து,பு,று என்னும் ஆறு வல்லின எழுத்துகள் தனிநெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துகளைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம்.
• நெடில் தொடர்க் குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம், வன்றொடர்க் குற்றியலுகரம், மென்றொடர்க் குற்றியலுகரம், இடைத்தொடர்க் குற்றியலுகரம் என ஆறுவகைப்படும்.
•    குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை
•    ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும்.
•    நெடில் தொடர்க் குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துக்களைப் பெற்று வரும். எடுத்துக்காட்டு ஆடு, மாடு, காது.

குற்றியலிகரம்:
•    குறுகிய ஓசையுடைய இகரம் குற்றியலிகரம்
•  நாகு+யாது = நாகியாது, வீடு+ யாது = வீடியாது, வீடு என்பன நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள். இவை நிலைமொழியாய் நிற்க, வருமொழியின் முதல் எழுத்து ய கரமாக இருப்பின், உகரம் இகரமாகும். இந்த இகரம்தான் குற்றியலிகரம் எனப்படும்.

முற்றியலுகரம்:
•    தன்மாத்திரை அளவில் குறையாமல் இருந்தால் அது முற்றியலுகரம் எனப்படும்.
•    பகு, பசு, படு, அது, தபு, பெறு இவை தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரம் (கு,சு,டு,து,பு,று) பெற்ற முற்றியலுகரங்கள்.
•    காணு, உண்ணு, உருமு இவற்றின் ஈற்றிலுள்ள மெல்லின (ணு, மு) உகரங்கள் முற்றியலுகரங்கள்.
•   தனிக்குறிலை அடுத்துச் சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும், பொதுவாகச் சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின்மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின்மேல் ஊர்ந்துவரும் உகரமும் ஆகிய மூன்றும் முற்றியலுகரம் எனப்படும்.

செய்தி வெளிப்படும் திறன்:
• தொடர்களில் செய்தி வெளிப்படும் தன்மையினைப் பொருத்துச் செய்தித் தொடர், வினாத் தொடர், விழைவுத் தொடர், உணர்ச்சித் தொடர் என பலவகைப்படுத்தலாம். விழைவுத் தொடர் வாழ்த்துதல், வேண்டுதல், கட்டளையிடுதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும்.

எடுத்துக்காட்டுகள்:
•    முயற்சி திருவினையாக்கும் என்பது ஆன்றோர் மொழி - செய்தித்தொடர்
•    பாடம் படித்தாயா? - விழைவுத் தொடர்
•    என்னே, அருவியின் அழகு! - உணர்ச்சித் தொடர்
•    கண்ணன் பாடம் படித்தான் - உடன்பாட்டுத் தொடர் (செய்தி)
•    கண்ணன் பாடம் படித்திலன் - எதிர்மறைத் தொடர் (செய்தி)

சொற்கள்:
•    சொற்கள் நான்கு வகைப்படும் ; இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
•    மற்றவர்களுக்கும் பொருள் புரியும் சொல் இயற்சொல் எனப்படும் எ.டு. தீ, காடு, மரம்.
•    பெயர் இயற்சொல், வினை இயற்சொல் என இயற்சொல் இரண்டு வகைப்படும்.
•    காற்று, நிலவு, ஞாயிறு, பலகை - பெயர் இயற்சொற்கள்
•    படித்தான், தூங்கினான், வந்தான் - வினை இயற்சொற்கள்
•    பொருள் தெரியாத ஆனால், கற்றவர்களுக்கு மட்டுமே புரியும் சொற்கள் - திரி சொல் எனப்படும்.
•    பீலி, உகிர், ஆழி - திரி சொல்லிற்கான எடுத்துக்காட்டுகள். (பீலி -மயில் தோகை, உகிர் - நகம், ஆழி - கடல், சக்கரம்).
•    பெயர் திரிசொல், வினைத் திரிசொல் என திரிசொல் இரண்டு வகைப்படும்.
•    எயிறு, வேய், மடி, நல்குரவு - பெயர்த் திரிசொல் (எயிறு - பல், வேய் - மூங்கில், மடி - சோம்பல், நல்குரவு - வறுமை).
•    வினவினான், விளித்தான், நோக்கினார் - வினை திரிசொல் (வினவினான் - கேட்டான், விளித்தான் - அழைத்தான், நோக்கினார் - பார்த்தார்).
•   தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிறபகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு; கேணி, பெற்றம் (கேணி - கிணறு, பெற்றம் -பசு).

தொகை நிலைத்தொடர்கள்:
•    வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என தொகை நிலைத்தொடர்கள் ஆறு வகைப்படும்.
•    பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்புக்கு வேற்றுமை உருபு எனப்பெயர்.
•    வேற்றுமைகள் எட்டு வகைப்படும். இதில் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற ஆறுக்கும் உருபுகள் உண்டு. அவை ஐ,ஆல், கு, இன், அது, கண்.
•    இரு சொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதை வேற்றுமைத் தொகை என்கிறோம்.
•    எடுத்துக்காட்டுகள்: பால் பருகினான் - இரண்டாம் வேற்றுமைத்தொகை (பால் +ஐ+ பருகினான்  - இங்கு ஐ என்னும் உருபு மறைந்துள்ளது).
•    தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை (தலை +ஆல்+ வணங்கினான்).
•    வேலன் மகன் - நான்காம் வேற்றுமைத் தொகை  (வேலன் +கு+மகன்).

தொகா நிலைத்தொடர்கள்:
• எழுவாய்த்தொடர், விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், வேற்றுமை தொகாநிலைத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் என தொகா நிலைத்தொடர்கள் ஒன்பது வகைப்படும்.
•    கபிலன் வந்தான் - இதில் கபிலன் என்னும் எழுவாயைத் தொடர்ந்து வந்தான் என்னும் பயனிலை வந்துள்ளதால், இது எழுவாய்த்தொடர்.
•    கதிரவா வா - இது விளித்தொடர்
•    கண்டேன் சீதையை - வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால், இது வினைமுற்றுத் தொடர்.
•    விழுந்த மரம் - விழுந்த என்னும் எச்சவினை மரம் என்னும் பெயர்ச்சொல்லோடு முடிவதால் இது பெயரெச்சத் தொடர்.
•    வந்து போனான் - வந்து என்னும் எச்சவினை போனான் என்னும் வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளதால், இது வினையெச்சத் தொடர்.
•    வீட்டைக் கட்டினான் - இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளதால், இது வேற்றுமைத் தொகா நிலைத்தொடர் எனப்படும்.
•    மற்றொன்று - மற்று + ஒன்று. மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் தொடர்ந்து வந்ததால் அது இடைச்சொற்றொடர் எனப்படும்.
•    மாமுனிவர் - இத்தொடரில் மா என்பது உரிச்சொல். இதைத் தொடர்ந்து முனிவர் என்னும் சொல் வந்துள்ளதால் இது உரிச்சொற்றொடர்.
•    வாழ்க வாழ்க வாழ்க - ஒரே சொல் இங்கு பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இது அடுக்குத்தொடர்.

இரண்டாம் வேற்றுமை உருபு
•    இதனை செயப்படுபொருள் வேற்றுமை எனவும் வழங்குவர்.
•    ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய அறுவகைப் பொருள்களில் வரும்.
•    வளவன் பள்ளியைக் கட்டினான் - ஆக்கல்
•    சோழன் பகைவரை அழித்தான் - அழித்தல்
•    தேன்மொழி கோயிலை அடைந்தாள் - அடைதல்
•    குழகன் சினத்தை விடுத்தான் - நீத்தல்
•    கயல்விழி குயிலைப் போன்றவள் - ஒத்தல்
•    கண்ணன் செல்வத்தை உடையவன் - உடைமை

மூன்றாம் வேற்றுமை உருபுகள்
•    ஆல், ஆன், ஒடு, ஓடு என பல பொருள்களில் இது வரும்
•    ஆல், ஆன் உருப்புகள் கருவி கருத்தா ஆகிய இருபொருள்களிலும் வரும். கருவி முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
•    நாரால் கயிறு திரித்தான் (முதற் கருவி காரியமாக மாறி அதுவாகவே இருப்பது) கையால் கயிறு திரித்தான்.
•    துணைக்கருவி (காரியம் செயல்படும்வரை துணையாக இருப்பது) இதேபோல் கருத்தாவும் இயற்றுதல், கருத்தா, ஏவுதல் கருத்தா என இருவகைப்படும்.
•    கோயில் அரசனால் கட்டப்பட்டது என்பது ஏவுதல் கருத்தா (தான் செய்யாமல் பிறரைச் செய்ய வைப்பது).

நான்காம் வேற்றுமை உருபுகள்
•    கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
•    புலவர்க்குப் பரிசு கொடுத்தார் - கொடை
•    நோய்க்குப் பகை மருந்து - பகை
•    பாரிக்கு நண்பர் கபிலர் - நட்பு
•    வீட்டுக்கு ஒரு பிள்ளை - தகுதி
•    வளையலுக்குப் பொன் - அதுவாதல்
•    கூலிக்கு வேலை - பொருட்டு
•    அனிதாவுக்கு மகன் அன்பரசு - முறை
•    திருத்தணிக்கு வடக்கு வேங்கடம் - எல்லை

ஐந்தாம் வேற்றுமை உருபு
•    இல், இன், இவை தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருள்களாக வேறுபடுத்தும்.
•    தலையின் இழந்த மயிர் - நீங்கல்
•    பாலின் நிறம் கொக்கு - ஒப்பு
•    சென்னையில் மேற்கு வேலூர் - எல்லை
•    அறிவில் மிக்கவர் ஔவை - ஏது
•    இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் ஆகும்.
•    வேலன் ஊரிலிருந்து வந்தான் - இருந்து
•    கயல்விழி என்னைவிடப் பெரியவள் - விட
•    தமிழைக்காட்டிலும் சுவையான மொழி உண்டா? - காட்டிலும்

ஆறாம் வேற்றுமை உருபு:
•    அது, ஆது என்பன ஒருமைக்கும், அ என்பது பன்மைக்கும் வரும். இவ்வுருபுகள் கிழமைப் (உரிமை) பொருளில் வரும்.
•    எடுத்துக்காட்டுகள்: எனது வீடு, எனது நூல், தை, மாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரெண்டு.
•    ஆறாம் வேற்றுமைக்கு ‘உடை’ய என்பது சொல்லுருபாக வரும்.
•    எடுத்துக்காட்டுகள்: என்னுடைய வீடு, நண்பனுடைய சட்டை.

ஏழாம் வேற்றுமை உருபுகள்:
•    கண், கால், மேல், கீழே, இடம், இல்.
•    மணியில் ஒலி - இல்
•    வீட்டின்கண் பூனை - கண்
•    அவனுக்கு என் மேல் வெறுப்பு - மேல்
•    பெட்டியில் பணம் உள்ளது - இல்

எட்டாம் வேற்றுமை உருபு:
•    விளிவேற்றுமை என்பது எட்டாம் வேற்றுமை எனப்படும்.
•    படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது. இதனை விளி வேற்றுமை என வழங்குவர். எடுத்துக்காட்டு; கண்ணா வா!, கிளியே பேசு!
•    திருக்குறளுக்கு வேறு பெயர்கள் - வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி, தெய்வ நூல்.
•    திருக்குறளை லத்தீனில் எழுதியவர் - வீரமா முனிவர்.
•    திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
•    திருக்குறளின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் நூல் - திருவள்ளுவமாலை.
•    ஜி.யு.போப்
•    முழு பெயர் - ஜியார்ஜ் யுக்ளோ போப்
•    பெற்றோர் பெயர் - ஜான் போப், கெதரின் யளாபக்
•    தமிழ் மொழியைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய ஏடுகள் - இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு.
•    திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு - 1886
•    திருவாசகத்தின் பெருமையை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஆண்டு - 1900

காவடிச்சிந்து
•    ஆசிரியர் - அண்ணாமலையார்
•    ஊர் - திருநெல்வேலி மாவட்டத்துச் சென்னிகுளம்
•    பெற்றோர் - சென்னவர், ஓவு அம்மாள்.
•    நூல்கள் - காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ்.
•    காலம் - 1861 - 1890

இனியவை நாற்பது
•    ஆசிரியர் பெயர் - பூதஞ்சேந்தனார்
•    ஊர் - மதுரை
•    காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
•  இவர் எழுதிய நூல் - இனியவை நாற்பது - இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.

தேம்பாவனி
•    ஆசிரியர் பெயர் - வீரமாமுனிவர்
•    இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
•    பெற்றோர் - கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்
•    பிறந்த ஊர் - இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
•    அறிந்த மொழிகள் - இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்.
•    தமிழ்க் கற்பித்தவர் - மதுரைச் சுப்பிரதீபக் கவிராயர்
•    இயற்றிய நூல்கள் - ஞானோபதேசம், பரமார்த்த குரு கதை சதுரகராதி, திருக்காவலூர்க்க கலம்பகம், தொன்னூல் விளக்கம்.
•    காலம் - 1680 - 1747

நளவெண்பா
•    பெயர் - புகழேந்திப் புலவர்
•    ஊர் - தொண்டை நாட்டின் பொன் விளைந்த களத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர்)
•    சிறப்பு - வரகுணப் பாண்டியனின் அவைப் புலவர்
•    ஆதரித்த வள்ளல் - சந்திரன் சுவர்க்கி
•    காலம் - கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு. கம்பரும், ஒட்டக்கூத்தரும் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்
•   இவர் எழுதிய நூல் - நளவெண்பா. நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூல். சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது. இதில் நானூற்று முப்பத்தொரு வெண்பாக்கள் உள்ளன.

இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு:
வேலு நாச்சியார்:
•    ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி.
•    பெற்றோர் - செல்லமுத்து சேதுபதி, சக்கந்தி முத்தாத்தாள்
•    பிறப்பு - கி.பி.1730

கடலூர் அஞ்சலையம்மாள்:
•    கடலூரில் 1890ஆம் ஆண்டு முதுநகரில் பிறந்தார்.
•    1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதுதான் அஞ்சலையம்மாள் தனது பொதுவாழ்க்கையை தொடங்கினார்.
•   நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டவர்.
•    ‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகளால் புகழப் பெற்றவர்.

அம்புஜத்தம்மாள்:
•   1899ஆம் ஆண்டு பிறந்தவர். வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட வசதியான வீட்டுப் பெண்.
•   வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
•   தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தார்.

No comments: