Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 22 July 2014

GATE: 2015 "கேட்' தேர்வில் தேர்வர்களிடம் கைரேகை பதிவு செய்யத் திட்டம்

வருகிற 2015-ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள பொறியியல் பட்டதாரி நுண்ணறி தேர்வில் (கேட்) பங்கேற்கும் தேர்வர்களிடம் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக கைரேகை, புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்பட உள்ளன.
அரசின் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலை பொறியியல் படிப்புகளை மேற்கொள்வதற்கு "கேட்" தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஒருசில உயர் கல்வி நிறுவனங்கள் இந்தத் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
2015-ஆம் ஆண்டுக்கான இந்தத் தகுதித் தேர்வு 2015 ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை வார இறுதி நாள்களில் (சனி, ஞாயிறு) நடத்தப்பட உள்ளன.
இந்தத் தேர்வில் பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதுகுறித்து அத் தேர்வை நடத்தவுள்ள கான்பூர் ஐஐடி வெளியிட்டுள்ள தகவல்கள்:
தேர்வில் இடம்பெறும் 22 தாள்களும் ஆன்-லைன் தேர்வாக நடத்தப்படும். இதில் சில கேள்விகளுக்கு எண்களில் பதிலளிக்கக் கூடியதாகவும், இதர கேள்விகள் கொள்குறி தேர்வு விடைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
தேர்வு தொடங்குவதற்கு முன்பாக தேர்வர்களிடம் புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள் பதிவு செய்யப்படும். இது அனைத்து தேர்வர்களிடமும் அல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக தேர்வர்கள் தேர்வுசெய்யப்பட்டு பதியப்படும்.
விண்ணப்பம், சான்றிதழ்கள் சமர்ப்பிப்பு, தேர்வுக் கட்டணம் செலுத்துதல் அனைத்தும் ஆன்-லைன் மூலம் மட்டுமே பெறப்படும்.
கேட் 2015 தகுதித் தேர்வு மதிப்பெண், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும்.

No comments: