பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் சேர்க்கை முறையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இதை, அனைத்து பல்கலைகளிலும் செயல்படுத்த அறிவுறுத்தி வருகின்றது.
இதுகுறித்து யுஜிசி தலைவர் வேத் பிரகாஷ் கூறுகையில்,
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஆன்லைன் சேர்க்கை முறையை முன்னுரிமை அளித்து செயல்படுத்த முயற்சித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஆன்லைன் சேர்க்கை முறை குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் கடிதம் மூலம் விவரம் அனுப்பப்படும். மேலும் அடுத்த மாதம் கூடவிருக்கும் கூட்டத்தில் இதுபற்றி விரிவாக பேசி முடிவு எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment