ஜேஇஇ அட்வான்ஸ்-2015 நுழைவுத்தேர்வின் கீ-அன்சர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பொறியியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான, ஐஐடி, என்ஐடி.,க்களில் பொறியியல் படிப்பு சேருவதற்காக அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வை (ஜே.இ.இ.), மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.
அந்த வகையில், 2015-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த நுழைவுத்தேர்வில் சுமார் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதற்கான கீ-அன்சர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மாணவர்கள் www.cbse.in, www.jeeadv.iitb.ac.in ஆகிய இணையதளங்களில் கீ-அன்சரை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment