திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி முடித்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். அவர்களில் 2014 ஜூலை 1-ம் தேதியின்படி, வயது வரம்பாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 35 வயதும், பி.சி., எம்.பி.சி., பிரிவினருக்கு 32 வயதும், இதர பிரிவினருக்கு 30 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், இதர வகுப்பினரைத் தவிர மற்ற பிரிவினருக்கு உயர்கல்வித் தகுதி இருப்பின் உச்ச வயது வரம்பு இல்லை. இப்பணியிடங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில், ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட பதிவு மூப்பு உடையவர்களின் பட்டியல் வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பதிவுதாரர்கள் அதனை பார்வையிட்டு பட்டியலில் விடுபட்டவை இருப்பின் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment