Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 19 October 2014

அடுத்தாண்டு பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி துவக்கம்: பாடநூல் கழகம்

"அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியை துவக்கி உள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரிசெய்ய வேண்டியிருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர புத்தகங்களை அச்சிடும் பணியை விரைவில் ஆரம்பிப்போம்" என, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.

உத்தரவு
இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: வழக்கமாக, பாட புத்தகங்களை, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவோம். தற்போது, நேரடியாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, புத்தகங்களை அனுப்ப, அச்சக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இதன்மூலம், புத்தகங்கள் விரைவாக சென்றடைவதுடன், அச்சக நிறுவனங்களுக்கு போக்குவரத்து செலவும் குறையும்.
ஜனவரி மாதம், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி திட்டத்தின் கீழ், மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும். அதற்காக, பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன. முன்கூட்டியே பணிகளை துவக்கியதால், பணி முடியும் நிலையில் உள்ளது. டிசம்பரில், புத்தகங்களை அனுப்புவோம்.
அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியையும் துவக்கி உள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரிசெய்ய வேண்டியிருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர புத்தகங்களை அச்சிடும் பணியை விரைவில் ஆரம்பிப்போம்.
முன்னுரிமை: பாட புத்தகங்களை அச்சிடும் பணி வழங்குவதில், தமிழக நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். 96 நிறுவனங்கள் பாட புத்தகங்களை அச்சிடுகின்றன. இதில் 10 நிறுவனங்கள் மட்டுமே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவை. மற்றவை, தமிழக நிறுவனங்கள்.
ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள அச்சக அதிபர்கள், தமிழக அச்சக நிறுவனங்களை நுழைய விடுவதில்லை. ஆனால் இங்கே வந்து போட்டி போடுகின்றனர். முடிந்தவரை தமிழக நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்குவது என முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு பாடநூல் வட்டாரம் தெரிவித்தது.

No comments: