Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 19 July 2014

அண்ணாமலைப் பல்கலையில் பிஇ படிப்பில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படிப்பில் சேர 2-வது கட்ட விண்ணப்ப விற்பனை ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 30-ம் தேதி 2வது கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15 ஆண்டிற்கான பிஇ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் கடந்த மே.9-ம் தேதி முதல் வழங்கப்பட்டது.   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன்.11-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. பிஇ படிப்பில் சேர 2545 பேர் விண்ணப்பித்தனர். பின்னர் ஜூலை 10,11 தேதிகளில் நடைபெற்ற கலந்தாய்வில் 1150 மாணவ, மாணவியர்கள் அனுமதி சேர்க்கை பெற்றனர்.
இந்நிலையில் பிஇ படிப்பிற்கு 3 ஆயிரம் பேர் அனுமதி சேர்க்கை செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படிப்பில் சேர 2-வது கட்ட அனுமதி சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப விற்பனை ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பம் விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடை தேதி ஜூலை 25-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்ட அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பம் விலை ரூ.800. எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பம் விலை ரூ.400 ஆகும். 

No comments: