காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவ, மாணவியருக்கு ரத்தசோகை நோய் வராமல் தடுப்பதற்காக, இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியை, மாவட்டச் சுகாதாரத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜ்திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) தியாகராஜன், திருப்புட்குழி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி மற்றும் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரிஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, மாவட்டச் சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கூறும்போது, “பழங்காலத்தில் உணவுகளை இயற்கை முறையில் மண்பாண்டங்களில் சமைத்துச் சாப்பிட்டனர். அதனால் நமது உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் கிடைத்தன. தற்போது பல்வேறு அவசர நிலை காரணமாக நவீனத் தொழில்நுட்ப முறையில் உணவு களைச் சமைத்துச் சாப்பிடுகின்ற னர். அதனால் உடலுக்கு வைட்டமின்கள் கிடைக்காமல் பல்வேறு நோய் தாக்குதல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதில் இரும்புச் சத்து குறைபாடு காரணமாக, வளர் இளம் பருவத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான பாதிப்புகளில் மற்றவர்களைவிட பெரும்பாலும் ஏழை, எளியவர்களின் குழந்தைகள் தான் பாதிக்கப்படுகின்றனர். கிராமப் புறங்களில் அரசுப் பள்ளியில் ஏழை,எளிய மாணவர்கள்தான் படிக்கின்றனர். அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில் பல்வேறு சிக்கல் உள்ளதால் அவர்களுக்குத் தேவையான இரும்புச் சத்துகள் கிடைப்பதில்லை. அதனால், ரத்த சோகை குறைபாடு ஏற்படுகிறது. இந்தக் குறைபாடு வருவதற்கு முன்பாகவே தடுப்பதுதான் சிறந் தது. ஏனென்றால் பெண்களுக்குப் பேறுகால நேரத்தில் இந்தக் குறை பாட்டினால் பல்வேறு சிக்கல்கள் உருவாகும். மேலும், குறை பாட்டைப் போக்குவதற்கான சிகிச்சையை எடுத்துகொள்ளா விட்டால் பிறக்கும் குழந்தைக்கும் ரத்தசோகை குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனால், ரத்தசோகை குறைபாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக மாவட்டத்தில் முதல் கட்டமாக, கிராமப்புறங்களின் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வியாழன்தோறும், பள்ளி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு நீல நிறம்கொண்ட இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிட்ட பின் மாத்திரை களைச் சாப்பிட வேண்டும். மேலும், கிராமப் பகுதிகளில் உள்ள செவிலி யர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும், பள்ளி செல்லாத 19 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளை களைக் கண்டறிந்து, அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் ஊழியர்களைக் கொண்டு அவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அரசுப் பள்ளிகளில் மாத்திரைகள் சரியான முறையில் வழங்கப்படுகின்றவா என வாரம் ஒருமுறை கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment