சட்டபல்கலை வரலாற்றில் இல்லாத அளவில் பி.ஏ.பி.எல்.( ஹானர்ஸ்) படிப்பில் உள்ள 102 இடங்களுக்கு 1,160 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில் ஐந்தாண்டு பி.ஏ.பி.எல். ஹானர்ஸ், பி.காம்.பி.எல். மற்றும் சட்ட பல்கலையின் கீழ் உள்ள ஏழு சட்ட கல்லூரிகளில் மூன்றாண்டு பி.எல். சட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு, இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதில், ஐந்தாண்டு படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 30ம் தேதியுடன் முடிந்தது. மூன்றாண்டு சட்ட படிப்புகளுக்கான விண்ணப்பம் மே 23 முதல் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, ஐந்தாண்டு பி.ஏ.பி.எல். ஹானர்ஸ் பட்டப்படிப்பில் உள்ள 102 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதற்கு 1,160 பேர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர். இது, பல்கலை வரலாற்றில் எந்த ஆண்டிலும் இல்லாத சாதனை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பல்கலை தரப்பில், "சட்டக் கல்வியில் இளைய தலைமுறையினருக்கு இருக்கும் ஆர்வத்தை இந்த விண்ணப்ப விற்பனை காட்டுகிறது" என்றனர்
No comments:
Post a Comment