பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு உரிய தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஜூன் 6, 7 தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்துப் பாடங்களையும் இந்தச் சிறப்பு துணைத் தேர்வில் மாணவர்கள் மீண்டும் எழுதலாம்.
அதோடு, தேர்வுக்கு வராத பாடங்களையும் இந்தத் தேர்வில் மாணவர்கள் எழுதலாம்.
சிறப்பு துணைத் தேர்வுக்கு தத்கல் முறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஜூன் 6, 7 தேதிகளில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
தேர்வுக் கட்டணம், பதிவுக் கட்டணத்தோடு சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500-ஐ பணமாகச் செலுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment