நிகர்நிலைப் பல்கலைக்கழகமான திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
காந்தியன் சோஷியல் ஒர்க், பிபிஏ ரூரல் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் மேனேஜ்மெண்ட், பி.காம் கோஆப்ரேஷன், பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், ஹோம் சயின்ஸ், டெக்ஸ்டைல்ஸ் அண்ட் பேஷன் டிசைன், அக்ரி, பி.டெக், பிஎட் போன்ற இளநிலை படிப்புகளும் எம்ஏ, எம்.எஸ்சி, எம்.டெக், எம்சிஏ, எம்பிஏ, எம்.எட் போன்ற முதுநிலை படிப்புகள் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் உள்ளன. மேலும் எம்பில், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, போஸ்ட் டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் இங்கு கற்றுத் தரப்படுகின்றன. ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்ஏ படிப்பும் இங்கு உண்டு. பிஎச்டி சேர்க்கை குறித்த அறிவிப்பு ஆகஸ்டு மாதத்தில் வெளியிடப்படும். இதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ. 1,000 .
அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.180. தபாலில் பெற வேண்டுமெனில் கட்டணம் ரூ. 225. நேரில் ரொக்கமாகவோ, தபாலில் பெற விரும்புவோர் கோடிட்ட வங்கி வரைவோலை மூலமாகவோ கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த பத்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
முதுநிலை, முதுநிலை டிப்ளமோ, போஸ்ட் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2014. எம்பில் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.06.2014
விவரங்களுக்கு: www.ruraluniv.ac.in
No comments:
Post a Comment