சூரியன், கோள்கள் மற்றும் விண்மீன்கள் பூமியை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன என்ற தாலமியின் கோட்பாடுதான் 15-ம் நூற்றாண்டு வரை நம்பப்பட்டு வந்தது. அக்கோட்பாட்டைத் தவறு என நிரூபித்தவர் கோப்பர்னிக்கஸ்.
சூரியனை மையமாக்கொண்டுதான் கோள்கள் சுற்றுகின்றன என்ற சூரிய மையக் கோட்பாட்டை அளித்தவர் கோப்பர்னிக்கஸ். கத்தோலிக்க மதக் குருவாக இருந்த கோப்பர்னிக்கஸ், ஆன் த ரெவல்யூஷன்ஸ் ஆஃப் த ஹெவன்லி பாடீஸ் (On the Revolutions of the Heavenly Bodies) என்ற நூலில் சூரிய மையக் கோட்பாட்டைப் பற்றி விளக்கியுள்ளார். வானியல் வல்லுனர், கத்தோலிக்க மதகுரு, கணிதவியலாளர் என பன்முகம் கொண்ட கோப்பர்னிக்கஸ் 1543-ம் ஆண்டு இதே நாளில்தான் மரணமடைந்தார்.
முதல் தந்தி செய்தி அனுப்பிய தினம்
செய்தியை அனுப்ப புறாக்களையும், மனிதர்களையும் பயன்படுத்திய காலத்தில், மின்சாரம் மூலம் செய்தியை அனுப்ப முடியும் என்று நிரூபித்தவர் அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் மோர்ஸ். 1837-ம் ஆண்டு இவர் கண்டுபிடித்த மின்சாரத் தந்தி, தகவல் தொடர்பில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
எனவே தான், இவர் கண்டு பிடித்த கருவி அவரின் பெயராலேயே, மோர்ஸ் கருவி என்று அழைக்கப்படுகிறது. 1844-ம் ஆண்டு இதே நாளில்தான், உலகின் முதல் தந்தி செய்தியை வாஷிங்டன் டி.சி-யிலிருந்து, பல்டிமோருக்கு சாமுவேல் மோர்ஸ் அனுப்பினார்.
No comments:
Post a Comment