தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது.
இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு குறித்து வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் தளர்வு வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என தொடரப்பட்ட வழங்கில் இது குறித்து வழக்கு தொடர்வதற்கு உரிய முகாந்திரம் இல்லை என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment