Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 26 April 2014

IIT நுழைவுத்தேர்வு விடைத்தாள் ஆன்லைனில் வெளியீடு: ‘கீ ஆன்சர்’ ஏப்ரல் 28-ல் வெளியாகும்

ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு முதல்கட்ட தேர்வான ஜெஇஇ மெயின் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி அன்றும், ஆன்லைன் வழியிலான தேர்வுகள் ஏப்ரல் 9, 11, 12, 19-ம் தேதிகளிலும் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 6-ல் நடந்த தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆன்லைனில் (www.jeemain.nic.in) வெளியிடப்பட்டுள்ளன.

இதில் கல்வித்தகுதி, வகுப்புப் பிரிவு ஆகியவற்றில் திருத்தம் செய்ய வேண்டியதிருந்தால் 28-ம் தேதிக்குள் ஆன்லைனிலேயே திருத்தம் செய்துகொள்ளலாம். பாடத்திட்ட வாரியம், பிளஸ்-2 தேர்வு பதிவு எண் ஆகியவை தொடர்பான திருத்தங்களை ஜூன் மாதத்தில் மேற்கொள்ளலாம். பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் எவ்வித திருத்தமும் செய்ய இயலாது.
ஒட்டுமொத்த ஜெஇஇ மெயின் தேர்வுக்கான விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வை நடத்திய மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. ஜெஇஇ மெயின் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வான அட்வான்ஸ்டு தேர்வு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. மெயின் தேர்வு ரேங்க் பட்டியலில் முதல் ஒன்றரை லட்சம் வரையில் இடம்பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர் ஆவர். அட்வான்ஸ்டு தேர்வு மே 4 முதல் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

No comments: