பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்து மையங்களிலும் நிறைவடைந்துள்ளன.
இப்போது, இந்த மதிப்பெண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவு மே 9-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏப்ரல் 12-ஆம் தேதியே விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் மையங்களிலிருந்து மதிப்பெண் விவரங்கள் சிடிக்களாக தொகுத்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த மையங்களிலிருந்து இந்த விவரங்களை முழுமையாகப் பெற ஒரு வாரம் வரை ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு, மதிப்பெண்ணில் பிழைகளை நீக்கவும், சரிபார்க்கவும் 2 வாரங்கள் வரை ஆகலாம் எனத் தெரிகிறது.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 3 முதல் 25 வரை நடைபெற்றது. தேர்வை பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் மாணவர்களும் எழுதினர்.
No comments:
Post a Comment